சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் சீண்டல்..! பொன்.கணபதிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த பாஜக..?

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பாஜகவின் குழுவில் சசிகலா புஷ்பா மற்றும் பொன்.பாலகணபதி ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

New responsibility for BJP executive who was involved in sexual harassment

சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொல்லை

தியாகி இமானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது பாஜக சார்பில் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளா் பொன்.பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளா் அஸ்வத்தாமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது முன்னாள் எம்பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்திய போது அவருக்கு பின்னால் இருந்த  மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி சசிகலா புஷ்பாவை தொடுவதும், இடுப்பு உள்ளிட்ட இடங்களில் கை வைப்பதும் போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மதரீதியில் மக்களை ஆத்திரப்படுத்தி பிளவுபடுத்தும் சங்பரிவார்.! பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆவேசம்

New responsibility for BJP executive who was involved in sexual harassment

புதிய பொறுப்பு கொடுத்த பாஜக

அந்த  காட்சியில் பல்வேறு சங்கடங்களால் சசிகலா புஷ்பா நெளிந்த போதிலும் அதுகுறித்து எதையுமே கண்டுக்காமல் இருந்தார் பால கணபதி மீண்டும் மீண்டும் தவறாக தொட்படியே இருந்தார். இந்த காட்சி சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவில் இருந்து பொன்.பாலகணபதி நீக்கப்படுவார் அல்லது சஸ்பெண்ட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக சார்பாக அமைக்கப்பட்ட குழுவில் பொன்.பாலகணபதியும், சசிகலா புஷ்பாவும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபிஸ்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஓபிஎஸ்..! துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்ததால் பரபரப்பு

New responsibility for BJP executive who was involved in sexual harassment

ஒரே குழுவில் சசிகலா புஷ்பா,பால கணபதி

 கோவை, திருப்பூர், ஈரோடு. மதுரை என பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவும் பாதிப்புகளை கண்டறியவும் குழு அமைக்கப்பட்டது. அதில் ஒரு குழுவில் பாஜக எம்எல்ஏ காந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக சசிகலா புஷ்பா இடம்பெற்றுள்ளார். அதே குழுவில் சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட  பால கணபதியும் இடம்பெற்றுள்ளார். இந்த சம்பவம் பாஜகவினர் மட்டுமில்லாமல் மற்ற அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

மதரீதியில் மக்களை ஆத்திரப்படுத்தி பிளவுபடுத்தும் சங்பரிவார்.! பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆவேசம்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios