நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகும் அந்தஸ்தைக் கூட இழந்தது. இதனால் மனமுடைந்த ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினா செய்தார்.

ஆனால் இதனை ஏற்க் கொள்ளாத தொண்டர்கள் அவரே தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தி  தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தியிடம் தங்களுக்கு அடுத்து கட்சிக்கு தலைமை ஏற்பது யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் அதை முடிவு செய்வது நான் அல்ல கட்சிதான்  என்று பதிலளித்தார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து இளைஞர்களுக்கு முக்கியத்துவ்ம் கொடுத்து வந்தார். தேர்தலுக்கு முன்பு கூட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக அவரது சகோதரி பிரியங்கா காந்தியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார்.

மேலும் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தி மக்களை வெகுவாகவே கவர்ந்தார். அவருக்கு தலைமை பொறுப்பு கொடுத்தால் குடும்ப நபர் ஒருவரே கட்சிக்கு தலைமை ஏற்றது போலவும் ஆகிவிடும் எனற சர்ச்சை எழும்.

ஆனாலும் மூத்த தலைவர்களிடன வழிகாட்டுதலுடன் . பிரியங்கா காந்தி செயல்பட வாய்ப்பு உள்ளதால் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பு செய்தி பரவி வருகிறது.