கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலின்றி கடந்த பிப்ரவரி 1ம் தேதி  கலாச்சார பிரிவில் இருந்து மாநில செயலாளர்கள் உள்ளிட்ட சில நிர்வாகிகளை அவர் நீக்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், அண்ணாமலை இவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்ததாக கூறபட்டது. 

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் கட்சியில் ஒருவரை சேர்ப்பதாக இருந்தாலும், நீக்குவதாக இருந்தாலும் அக்கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் தான் முடிவு எடுப்பார். அதன் பிறகு தான் நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும். இதுதான் ஒவ்வொரு கட்சியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜகவின் கலை, கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலின்றி கடந்த பிப்ரவரி 1ம் தேதி கலாச்சார பிரிவில் இருந்து மாநில செயலாளர்கள் உள்ளிட்ட சில நிர்வாகிகளை அவர் நீக்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், அண்ணாமலை இவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்ததாக கூறபட்டது. 

இந்நிலையில், புதிய நிர்வாகிகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கலை, கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராமை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, சிவக்குமார் என்பவரை நியமித்தார். அண்ணாமலை தன்னை பதவியில் இருந்து நீக்க மாட்டார்கள் என காயத்ரி ரகுராம் நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில் மாற்றம் செய்ததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சி பொறுப்பு பறிபோன பின் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில்;- ”எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என குறிப்பிட்டிருக்கிறார். 

இந்நிலையில், தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராமை நியமித்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.