தமிழக மக்களை விட ரஜினியை அதிகம் எதிர்பார்த்திருந்தது அவர்களது ரசிகர்கள் தான்.
அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக கூறி இருக்கும் நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அவரது ரசிகர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? தமிழகத்தை விட தமிழக மக்களை விட ரஜினியை அதிகம் எதிர்பார்த்திருந்தது அவர்களது ரசிகர்கள் தான்.
அதற்கு ஏற்றார் போல் 2017 தொடங்கி ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் பேசிய பேச்சும் இருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் டிசம்பர் 29ம் தேதி ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த். அதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் சிலர் வா தலைவா வா அரசியலுக்கு வாங்க தலைவா என்று முழக்கமிட்டனர். தன்னை மீண்டும் மீண்டும் வேதனை படுத்த வேண்டாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இந்த அறிவிப்பினால் மக்கள் மற்றும் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரச்சினையின் அறிவிப்பு குறித்து பேசிய கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் ராஜன் ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய ரஜினிகாந்த் ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும் என்கிறார் நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் நந்தகுமார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 12, 2021, 10:42 AM IST