Asianet News TamilAsianet News Tamil

சத்தம் இல்லாமல் நடந்த காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு விழா..! அன்புமணியை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள்..!

குருவுக்கு பாமக சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆனால் மணிமண்டப திறப்பு விழா காதும் காதும் வைக்கப்பட்டது போல் ரகசியமாக நடைபெற்றது. பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை. ஒரு மாபெரும் தலைவன் என்று வன்னியர் சங்க இளைஞர்கள் கருதும் குருவின் மணிமண்டப திறப்பு விழா குறித்து ஒரு பேப்பர் விளம்பரம் கூட பாமக சார்பில் செய்யப்படவில்லை என்கிறார்கள்.

New memorial for Kaduvetti Guru...Ramadoss inaugurates
Author
Tamil Nadu, First Published Sep 18, 2019, 10:40 AM IST

காடுவெட்டி குரு மணிமண்டப திறப்பு விழாவை ரகசியமாக நடத்தியது ஏன் என்று வன்னியர் சமுதாய அமைப்பைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

ராமதாசுக்கு பிறகு பாமகவின் முகமாமக இருந்தவர் காடுவெட்டி குரு. வன்னியர் சங்க தலைவராக இருந்த குருவை அச்சமுதாய இளைஞர்கள் தங்கள் வழிகாட்டியாக கருதினர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் திரளும். ஆர்ப்பரிக்கும் பாமக தொண்டர்களை ஒற்றை விரவில் அடக்குபவர் காடுவெட்டி குரு. இப்படி பாமகவின் அடையாளமாக திகழ்ந்த குரு உடல் நலக்குறைவால் காலமானார். பிறகு அவரது மரணத்தை அடிப்படையாக வைத்து அவரது குடும்பத்தினர் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக புகார் அளித்தனர். பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட அனைத்தும் சுமூகம் ஆனது.

New memorial for Kaduvetti Guru...Ramadoss inaugurates

இந்த நிலையில் குருவுக்கு பாமக சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆனால் மணிமண்டப திறப்பு விழா காதும் காதும் வைக்கப்பட்டது போல் ரகசியமாக நடைபெற்றது. பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை. ஒரு மாபெரும் தலைவன் என்று வன்னியர் சங்க இளைஞர்கள் கருதும் குருவின் மணிமண்டப திறப்பு விழா குறித்து ஒரு பேப்பர் விளம்பரம் கூட பாமக சார்பில் செய்யப்படவில்லை என்கிறார்கள்.

New memorial for Kaduvetti Guru...Ramadoss inaugurates

அரியலூர் மாவட்டத்திற்குள் மட்டும் பெயரளவில் விளம்பரம் செய்துவிட்டு சென்னையை அந்த செய்தி சென்றடையாமல் பார்த்துக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். அன்புமணி ராமதாசை விளம்பரப்படுத்தி பல கோடிகளை செலலவு செய்து தமிழ், ஆங்கில நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

New memorial for Kaduvetti Guru...Ramadoss inaugurates

மேலும் ஊடகவியலாளர்களுக்கு கூட பெரிய அளவில் இந்த நிகழ்வு குறித்து பாமக தரப்பில் இருந்து தகவல் அனுப்பப்படவில்லை என்கிறார்கள். வழக்கமாக அன்புமணியின் பேச்சுகளை ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கும் அவரது ஐடி டீம் காடுவெட்டி குரு மணிமண்டப திறப்பை குறித்து மூச் விடவில்லை. இதனால் ஏன் இப்படி ஒரு தலைவனை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்று வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios