NEW COUNT IN congress and bjp in karnataga

காங்கிரஸூடன் மட்டும் தான் கூட்டணி என்று எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு எல்லா எம்எல்ஏக்களும் ஓகே சொல்வார்களா என்றால் அது சந்தேகமே....

இந்நிலையில், இன்று காலை கூடிய எம்எல்ஏ கூட்டத்தில், காங்கிரசில் இருந்து 66 எம் எல்ஏக்கள் மட்டுமே கலந்துக்கொண்டாதாக தகவல் வெளியாகி உள்ளது. மீதம் 12 எம் எல் ஏக்கள் கலந்துக்கொள்ள வில்லை என தெரிய வந்துள்ளது. 

ஆனால் காங்கிரசோ எல்லா எம்எல்ஏக்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என தெரிவித்து உள்ளது. 

இந்நிலையில்,12 எம்எல்ஏக்களில், 9 எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு வந்துக் கொண்டிருப்பதாக தகவல் கொடுக்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீதம் உள்ள 3 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள கூட முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை....

இந்நிலையில், இந்த புது கணக்கை பாருங்க.....

ஜனதா தளம் - 38 சீட்டு... அதில் ஒன்னு செல்லாது... அதனால 37..

காங்கிரஸ் வசம் - 78 சீட்டு...

மொத்தம் 115..

ஆச்சா... 

இப்போ... ஜனதா தளத்துல முதல்வர் பதவி கேட்டு தலைமறைவான ரேவண்ணா சேர்த்து 13 பேர்...

காங்கிரஸ் கூட்டணியை ஒப்புக்கமாட்டோம்னு 6 பேர்...

காங்கிரஸ்ல இருந்து லிங்காயத்துகளை குறிவச்சவகையில்... 12 பேர்...

மொத்தம் 13 + 6 + 12 => 31..

அப்படின்னா.. மீதம்...

115 - 31 => 84..

கடைசியில் மஜத மற்றும் காங்கிரஸ் இணைந்து 84 மட்டுமே மிஞ்சும்... இதை வைத்து எப்படி காங்கிரஸ் ஆர்த்சியை பிடிக்கும் என்பது தான் கேள்விகுறி.

இதுல எடியூரப்பா பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியை அமைக்க ஒரு வார கால அவகாசம் வேற கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் போற நிலைமையை பார்த்தல் ஒரு வாரம் தேவைப்படாது என்பது போல தான் தோன்றுகிறது.