neutrino is not dangerous says tamilisai
நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மீத்தேனை போல நியூட்ரினோ ஆபத்தானது அல்ல என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் போட்டிபுரம் என்ற இடத்தில் மலையை குடைந்து நியூட்ரினோ திட்டம் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வந்தது.
இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு குறித்த இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தென்மண்டல பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மருத்துவர் என்ற முறையில் நான் சொல்கிறேன். மீத்தேனை போன்று நியூட்ரினோ ஆபத்தானது அல்ல. நியூட்ரினோ நமது சுவாசத்திலேயே கலந்து செல்கிறது.
தமிழகத்திற்கு வரும் அனைத்து திட்டங்களையும் நாம் எதிர்க்க கூடாது. நல்ல திட்டங்களை வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
