பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்வதில் கமல் ரஜினியை முந்திக்கொண்டுவாரோ என்கிற கவலை சமீபகாலமாக அவரது நலம் விரும்பிகளுக்கு அதிகரித்துள்ளது.

அதற்கு வலு சேர்ப்பது போல் எப்போதுமே பி.ஜே.பி குறித்து அவர் தரும் அறிக்கைகள் மோடியை மெதுவாகத் தடவிக்கொடுப்பது போலவே இருக்கும்.

ரஃபேல் ஊழலா? ‘மோடியக் குற்றவாளி என்று சொல்லவில்லை. ஆனால் அதில் குற்றம் நடந்திருக்குமோ என்று சந்தேகப்படும் உரிமை எங்களுக்கு இருப்பதாக நினைப்பதில் தவறு இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை என்பது போல மூக்கைச்சுற்றி வழக்கம் போல குழப்புவார்.

ஆனால் இரு தினங்களுக்கு முன்பு வந்த அவரது ஸ்டேட்மெண்ட் ஜொள்ளு வழிய அவர் பி.ஜே.பி.யுடன் கூட்டு வைக்க காத்திருப்பதை அம்பலப்படுத்திவிட்டது.

’தமிழகத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை’ என்பதே கமலின் அந்த ஸ்டேட்மெண்ட்.

அந்த ஸ்டேட்மெண்டைப் படித்துக்கொந்தளித்த ஒருவர் வடிவேலு-பார்த்திபன் காம்பினேஷனில் வந்த ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ காமெடியுடன் ஒப்பிட்டு விளாசியிருக்கிறார்.

பாத்து எஞ்சாய் பண்ணுங்க...