எந்த நேரத்தில் போலீஸ் தூக்குமோ என்று திக் திக் என வாழ்வதைவிட சரணடைந்து கொஞ்ச நாளில் ஜாமீனில் வெளியே வருவது உத்தமம் என்பது இவர்களுக்கு தோன்றாதா?
சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் தள்ளுபடி செய்து விட்ட நிலையில் உடனடியாக சரண் அடைவது தான் அமைச்சராக இருந்த ஒருவருக்கு அழகு.எத்தனை நாள் தலைமறைவாக இருந்து விட முடியும்? வெளியே வராவிட்டால் சரி போய் தொலையட்டும் என அப்படியே போலீஸ் விட்டுவிடுமா?

நிம்மதியாக சாப்பிட முடியாது, தூங்க முடியாது. எந்த நேரத்தில் போலீஸ் தூக்குமோ என்று திக் திக் என வாழ்வதைவிட சரணடைந்து கொஞ்ச நாளில் ஜாமீனில் வெளியே வருவது உத்தமம் என்பது இவர்களுக்கு தோன்றாதா?
நம்மை கேட்டால் ஒரு ஜாலிக்காக சொல்கிறோம்..
இதுபோல முன் ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவாக இருப்பவர்களை தனிப்படை அமைத்து செலவு செய்து தேடுவதைவிட தினமும் பயந்து பயந்து வாழட்டும் என்று அப்படியே விட்டு விட வேண்டும். சிறையில் இருப்பதை விட மிகப் பெரிய தண்டனை இது! பொதுவெளிக்கே வரமுடியாமல் எவ்வளவு நாளைக்கு தலைமறைவாக இருந்து விடமுடியும்? ஒரு அமைச்சராக இருந்தவர் கம்பீரமாக சரணடைந்து ஜாமினில் வெளியே வருவதை தவிர்த்துவிட்டு என்னென்ன கேவலங்களை சந்திக்கிறார் என பலரும் ராஜேந்திரபாலாஜியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவரை பற்றி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கருத்துகள் இங்கே...
வேலுமணி :போலீஸ் கண்ணுலயே மண்ணை தூவிட்டு ஒளிஞ்சு இருக்கீங்களேண்ணே! நீங்க ராஜேந்திரபாலாஜி இல்ல.
'ராஜதந்திரி'பாலாஜி
ராஜேந்திர பாலாஜி :நீங்க மட்டும் என்னவாம்...ரெய்டு முடிந்தவுடன் ஆவணங்கள் எல்லாத்தையும் மாயமாய் மறைய வச்சிட்டீங்களே? நீங்க வேலுமணி இல்ல...'மாயமணி'ண்ணே!...
இது அதிமுகவுக்கு மிகவும் கேவலமான செய்தி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை இணைப்பாளர் ஆகியோர் உடனடியாக ராஜேந்திரபாலாஜி யை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் இவர்கள் அவர் தலைமறைவாக இருப்பதற்கு உடந்தை போல் தோன்றும்.
ஆன்மீகவாதியான ராஜேந்திரபாலாஜி ஆன்மீக நாடான கைலாசாவிற்குச் சென்று நித்தியானந்தாவிடம் அடைக்கலமாகிவிட்டதாக வாட்சப்பில் இந்தப் படம் வதந்தியாகப் பரவுகிறது!
