Asianet News TamilAsianet News Tamil

பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை…. மதுரையில் இருந்து திறந்து வைக்கிறார் பிரதமர்….

நெல்லை பாளையங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி நாளை காலை  11 க்கு  மதுரையிலிருந்து திறந்து வைக்கிறார்.

nellai speciality hopstal
Author
Madurai, First Published Jan 26, 2019, 9:55 PM IST

தமிழகத்தில்   ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க பல்வேறு இடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியாக அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நாளை நடக்கிறது.

nellai speciality hopstal

மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

இதே விழாவில் மதுரை, மற்றும் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதே போல் நெல்லை பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

nellai speciality hopstal

விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்படுகிறார். பகல் 11.20 மணிக்கு விமானம் மதுரை வந்தடைகிறது.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பிரதமர் மோடி, 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகர் செல்கிறார். பின்னர் விழாவில் பங்கேற்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் அரசு விழா நடைபெறும் இடத்தின் அருகே நடைபெறும் பாஜக  மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன் பிறகு பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios