இந்துக்களின் கடவுள்  ஸ்ரீகிருஷ்ணரை அவதூறாக பேசிய வழக்கில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி மீது நெல்லை போலீசார் 6 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். திட்டமிட்டு மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது . அதில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்துக்கள் வணங்கும் கடவுள்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும்  பெண்கள் புடைசூழ இருந்தவர், கோபியர்கள் அவரை கொஞ்சியதால் அவர் கோபால கிருஷ்ணன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளார் .பெண்களிடம் அவர் செய்யும் சில்மிஷங்கள் அத்தனையையும் புராணங்களில் லீலைகள் என்றே வர்ணிக்கப்பட்டுள்ளது.  இப்போது அவர் அப்படி செய்திருந்தால் அவர் மீது ஈவ்டீசிங் வழக்குதான்  பாய்ந்திருக்கும் என்பது போன்று விமர்சித்திருந்தார் வீரமணி .

 

அவரின் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, தங்களின் காக்கும் தெய்வத்தையே  அப்படி வீரமணி பேசியது இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணரை வழிபடும்  பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்துக்களின் கடவுளும் பகவத் கீதையின் கதாநாயகடுமான கிருஷ்ணரையே இப்படி போசியிருப்பதை மன்னிக்கவே முடியாது இதற்கு கி. வீரமணி உடனே வருத்தம் தெரிவித்து  பகிரங்கமாக மன்னிப்பு கோட்க வேண்டும் என்று கொந்தளித்தனர். அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது இந்து அமைப்புகளின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் உள்ள ஸ்ரீராதா தாமோதரர் வழிபாட்டு மையத்தின் தலைவர் சீதாபதி, கி.வீரமணி மீது நெல்லை ஜே.எம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை மிக இழிவாக பேசிய  ஒளிப்பதிவை கேட்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன்,  இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் , அவரின் பேச்சு வன்முறையை தூண்டுப் வகையிலும், அமைதியை சீர் குலைக்கும் நோக்கிலும் உள்ளதால் அவரை கடுமையாக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந் நிலையில் வழக்கு விசாரனை நீதிமன்றத்தில் வந்தது அப்போது மனுவை விசாரித்த நீதிபதி,  மனுதாரரின் கோரிக்கையில் உண்மை இருந்தால் உடனே குற்றம் சாட்டப்ட்டவரின் மீது  வழக்கு பதிவு செய்யலாம் என காவல் துறைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில்  நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கி. வீரமணி மீது. வன்முறை தூண்டும் வகையில் பேசுதல்,  திட்டமிட்டு மத உணர்களை புண்படுத்துதல், அவதூறு கருத்துக்களை பரப்புதல், தொழில் நுடபத்தை தவறாக பயன்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிவிடர் கழகத்தினர். ஆசிரியர் அவர்கள் தவறாகவோ அல்லது வதந்தியோ பேசவில்லை , புராணக் கதைகளிலும்,  இதிகாசங்களிலும் சொல்லப்பட்டுள்ளதைத்தான் மேற்கோள்காட்டி அவர் பேசினார். அதில் ஒன்று தவறு இருப்பதாக தெரியவில்லை. இது தவறு என்று வழக்கு தொடுத்தால்  அதை சட்டரீதியாக ஆசிரியர் வீரமணி எதிர்கொள்வார் என்று தெரிவித்தனர்.