நீட் தேர்வு பிரச்சனையில் மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் மிரட்டப்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனதையடுத்து அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.,

மாணவர்களும், இளைஞர்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி விஸ்வநாதம் கல்லூரியில் கடந்த 8 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை இந்தி கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் நல்லகண்ணு ஆகியோர் கேட்டுக் கொண்டதையடுத்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் மாணவர்களுக்கு அவர்கள் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து  வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நீட் தேர்வு பிரச்சனையில் மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டினார்.