NEET exam in kerala people help to the students

கேளர மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத சென்றுள்ள தமிழக மாணவர்களுக்கு கேரள அரசும், சிஐடியு தொழிற்சங்கமும் தமிழ் அமைப்புகளும் இணைந்து தங்குவதற்கும், நீட் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து மற்றும் உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்து அசத்தி வருகின்றன.

மருத்துவ படிப்புக்கான தகுதி நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.



கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள மையங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுத கேரளா செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சிஐடியு, தமிழ்ச் சங்கம் ஆகியவை கேரள அரசுடன் இணைந்து திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சிறப்பு தகவல் மையங்கள் அமைத்துள்ளன.

திருவனந்தபுரத்துக்கு சென்ற மாணவர்கள் தங்க வசதியாக தைக்காடு மாடல் மேல்நிலைப்பள்ளியிலும், மாணவிகள் தங்க வசதியாக மணக்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.