Asianet News TamilAsianet News Tamil

தனுஷை மரணக்குழியில் தள்ளிய திமுக.. வாக்குறுதி என்னவாயிற்று? எகிறி அடிக்கும் எடப்பாடியார்..!

மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது  தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Neet Exam...Edappadi palanisamy slams dmk government
Author
Tamil Nadu, First Published Sep 12, 2021, 11:56 AM IST

மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது  தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார். இவரது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 3வது முறையும் தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

Neet Exam...Edappadi palanisamy slams dmk government

இதனால் மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது. குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்துள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நீட் தேர்வு  நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதற்கு சரியான பதிலைக் கூறி

Neet Exam...Edappadi palanisamy slams dmk government

மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது  தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

 

மேலும், அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்? என்று   டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios