Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு அறிவிப்பு வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுகிறது..!! ஆசிரியர்கள் சங்கம் அதிர்ச்சி..!!

நீட் தேர்வு ஜூலை 26 ந்தேதி நடத்தப்படும் என்ற  மத்திய அரசின் அறிவிப்பு  மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது

neet exam announcement is very hurting students and parents - teachers association demand to cancel neet exam
Author
Chennai, First Published May 5, 2020, 5:59 PM IST

கொரோனா முடிவுக்குவராத நிலையில் நீட் தேர்வு அறிவிப்பு வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது எனவே நீட் தேர்வு ரத்து செய்ய  வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை. விடுத்துள்ளது,  இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அச்சங்கம், கொரோனா பரவலை தடுக்க தீவிரநடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழ்நாடு அரசை பாராட்டி மகிழ்கிறோம்.  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாக உள்ளது. மூன்றாம் உலகப்போரென கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றினை கொரோனா தொடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றி வரும்நிலையில்  நாளுக்குநாள் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து வருகிறது.  பேரிடர் காலக்கட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையான தாகும்.  உயிரா படிப்பா என்றால் உயிரே முக்கியம் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். 

neet exam announcement is very hurting students and parents - teachers association demand to cancel neet exam

ஆனால்  ஒத்திவைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு ஜூலை 26 ந்தேதி நடத்தப்படும் என்ற  மத்திய அரசின் அறிவிப்பு  மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது கொரோனாவால் ஊரடங்கு காலத்தில் வயிற்றுப்பசியாற்றுவதற்கே திண்டாடும் நிலையில் நீட்  தேர்வை எதிர் கொள்ள எப்படி ஆயத்தமாக முடியும். நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பதிவுசெய்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர். இதில் 20,000 பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மின்னல் வேகத்தில் கொரோனா பரவி நாடு முழுவதும் 40,000 ஆயிரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு தமிழ்தாட்டில்  கொரோனா பாதிப்பால் 3,000 க்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா எப்போது முடிவுக்குவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு உடலும் மனதும் ஒருநிலையில் இல்லை.

neet exam announcement is very hurting students and parents - teachers association demand to cancel neet exam
 

இந்நிலையில் நீட் தேர்வு  அறிவிப்பால்  மாணவர்களின் நிலைக்குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மனஉளைச்சலிலும் உள்ளார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு போதிய வசதியின்றி தவிப்பதும் வெளியே வராத சூழலிலும், இணையதள வசதி இயக்கம் சரிவர தொடர்பு இல்லாததாலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர் . தேர்வு நடந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் பெற்றோர்களும் உள்ளனர்.  எனவே பேரிடர் காலம் என்பதால்  நீட் தேர்வினை ரத்துசெய்து  பழைய முறையான பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவசேர்க்கை யினை நடத்திட ஆவனசெய்யவேண்டும். இல்லையேல் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு  மாநில அரசே ஒரு நுழைவுத்தேர்வு வைத்து தேர்வுசெய்து  இடமளிக்கலாம். எனவே, மேலும் பெற்றோர்கள் மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் நீட் தேர்வினை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசினை வலியுறுத்தும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios