மசோதாவில் இருக்கும் விஷயங்கள் குறித்து தெளிவு பெற ஆளுநருக்கு முழு உரிமை உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்புக்கு இந்த மசோதா எந்த வகையில் மாறுப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

மாநில அரசு அனுப்பும் எல்லா விஷயங்களையும் எந்தப் பரிசீலனையும் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் ஆளுநருக்கு கிடையாது. அப்படிச் செய்வதற்கு ஆளுநர் ஒன்றும் தபால்காரர் கிடையாது என்று தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 13 அன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வ்லிருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. கடந்த 5 மாதங்களாக ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருந்த அந்த மசோதாவை அரசுக்கே ஆளுநர் என்.என். ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் நடவடிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்நிலையில்ந்த சூழலில், இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். “நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து சொல்லிவிட்டோம். இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநரே வைத்திருக்கிறார் என்று தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது. இதை வைத்து ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் திமுகவினர் கோரினார்கள். மாநில அரசு அனுப்பும் எல்லா விஷயங்களையும் எந்தப் பரிசீலனையும் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் ஆளுநருக்கு கிடையாது. 

அப்படிச் செய்வதற்கு ஆளுநர் ஒன்றும் தபால்காரர் கிடையாது. மசோதாவில் இருக்கும் விஷயங்கள் குறித்து தெளிவு பெற ஆளுநருக்கு முழு உரிமை உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்புக்கு இந்த மசோதா எந்த வகையில் மாறுப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எந்தக் காரணத்துக்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, தமிழக அரசை கட்டுப்படுத்தாது என நினைக்கும் வரை இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.