Asianet News TamilAsianet News Tamil

நயினார் நாகேந்திரனின் சொந்த செல்வாக்கு + பணபலத்தை மீறி எப்படி? டெபாசிட் வாங்கவே நாக்கு தள்ளிடுமே... பீதியில் எதிரணி

நெல்லையில் பிஜிபி நயினார் நாகேந்திரன் களமிறங்க இருப்பதால் டெபாசிட் வாங்கவே நாக்கு தள்ளிவிடும் என பீதியில் இருக்கிறார்களாம் எதிரணியில் இருப்பவர்கள்.

Nayinar Nagendhiran Will participate at nellai
Author
Chennai, First Published Feb 21, 2019, 2:46 PM IST

நெல்லை தொகுதி சீட்டைக் குறி வைத்திருக்கும்  அதிமுக புள்ளிகள் மற்றும் எதிரணியில் நிற்க சீட் கேட்டு வரும் பலர் ரொம்பவே நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நடுக்கத்திற்கு காரணமே மாஜி அதிமுக அமைச்சரும் பிஜேபியின் முக்கிய புள்ளியான நயினார் நாகேந்திரன் தான்.

மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவோடு செல்வாக்கு மிகுந்த தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அதே ஜெயலலிதாவால், டம்மியாக்கப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சமயத்தில் மோடி முன்னிலையில் தன்னை பிஜேபியில் ஐக்கியப்படுத்திக் கொண்ட நயினார் நாகேந்திரனுக்கு, மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப் பட்டது. இது போக ராஜ்யசபா எம்.பி.யாக்குவதாக வாக்குறுதியையும் கொடுத்தது பிஜேபி. மேலிடம். மோடி ஆட்சி முடியப் போகும் இந்த நேரம் வரை ராஜ்யசபா MP. ஆக முடியாததால், லோக்சபா MPயாகி விடுவது என்ற கணக்கில் நெல்லை தொகுதியைக் குறி வைத்து கோதாவில் குதித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

Nayinar Nagendhiran Will participate at nellai

நெல்லை மாவட்டத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை, பா.ஜ.க. மேலிடத்திடம் நிரூபிப்பதற்காகவும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்காகவும் யோகி ஆதித்யநாத்தை கடந்த 12-ஆம் தேதி நெல்லைக்கு வரவழைத்து, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார் நயினார் நாகேந்திரன். ஆனால் திடீரென ப்ரோக்ராமை கேன்சல் செய்ததால், கொஞ்சமும் அப்செட் ஆகாத அவர் அசராமல் அடுத்த ஸ்டெப்பை வைத்திருக்கிறார் நாகேந்திரன்.

Nayinar Nagendhiran Will participate at nellai

அதிமுக தலைமையிடம் நெல்லை தொகுதியை கேட்டு வாங்கும்படி, பிஜேபியின் டெல்லி மேலிடத்திடம் கோரிக்கை வைத்திருக்கும் நயினார் நாகேந்திரன், தேர்தலுக்கு தாராளமாக செலவு செய்யத் தயார் என்பதையும் சுட்டிக் காட்டி யிருக்கிறார். பணபலம், சொந்த செல்வாக்கு அதிமுக வாக்கு வங்கி என மூன்றும் பலமாக இருப்பதால் நிச்சயம் வெற்றிபெறுவேன் என சொன்னதால் பிஜேபி மேலிடமும் ஓகே சொன்னதால் உற்சாகமாக இருக்கிறாராம்.

ஆனால் எதிரணியில் இருப்பவர்களோ, நெல்லையில் பிஜிபி நயினார் நாகேந்திரன் களமிறங்க இருப்பதால் டெபாசிட் வாங்கவே நாக்கு தள்ளிவிடும் என பீதியில் இருக்கிறார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios