அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணனுக்கு இன்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்தது அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் நவநீதிகிருஷ்ணன். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் எம்பியாக இருந்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் இவர்.

இந்நிலையில் இன்று இரவு நவநீதகிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை உடனடியாக சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு நவநீத கிருஷ்ணனக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நவநீதகிருஷ்ணன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு மாநிலங்களவையில் நவநீத கிருஷ்ணன் பேசும்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
