பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் எல்லையில் தீவிரவாத முகாம்களை அமைத்திருப்பதாகவும் அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருப்பதாகவும்  உளவுத்துறை  எச்சரித்துள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு இந்திய பாதுகாப்பு அமைப்புகளை எச்சரித்துள்ளார் . கடந்த மே 6-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா என்ற பெய்போரா கிராமத்தில்  பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் ஹிஸ்புல்-முஜாஹிதீன் தளபதி ரியாஸ் நாய்கூ சுட்டுக்கொல்லப்பட்டு  இந்தியாவில் நடைபெறவிருந்த மிகப்பெரிய பயங்கரவாத  சதி முறியடிக்கப்பட்டுள்ளது . அதுதொடர்பான உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவால் தலைமையில் நடைபெற்றது .  அதில் அவர்  எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அறிவித்துள்ளார் .  அதாவது உளவுத்துறை தகவலின்படி இந்தியா பாகிஸ்தான் இடையை நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது ,

 

சமூகத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதையடுத்து பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளது, பாக்கிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  ஜெய்ஷ்-இ-முகமது ,  ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி சதிவேலைகள் நடத்த திட்டமிட்டு வருகின்றன . எல்லையில் இந்தியா தனது ராணுவ சாமர்த்தியத்தால் அவைகளை முன்கூட்டியே கண்டறிந்து சதிவேலைகளை முறியடித்து வருகிறது .  ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுறுவி சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி எல்லைக் கோட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம்  அழித்தது . இந்நிலையில் மீண்டும்  அந்த முகாம்கள் உயிர் பெற்றிருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  அதாவது லஷ்கர்-இ-தொய்பா ஹிஸ்புல்-முஜாஹிதீன் ,  ஜெய்ஷ இ முகம்மது உட்பட சுமார் 450 பயங்கரவாதிகள் எல்லைக்கோட்டில் ஊடுருவ காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டி கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள  துதானியல், ஷார்தா மற்றும் அத்காம் ஆகிய இடங்களில் பதுங்கி இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை ஏவுகணை தளங்களில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 235 ஆக இருந்த நிலையில் தற்போது அவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . கிட்டத்தட்ட 350 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும் , பெரும்பாலானோர் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது .  தற்போது எல்லையில் 20க்கும் மேற்பட்ட ஏவுகணை தளங்களை அமைத்து அவர்கள் தாக்குதல் நடத்த காத்திருப்பதாக உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என தொடர்ந்து  பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிவரும்  நிலையில் ,

 

மேற்கு பகுதியில் பாகிஸ்தான் விமானப்படையின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது குறித்தும் உளவு அமைப்புகள்  தகவல் பகிர்ந்துள்ளன . இந்நிலையில் இந்திய பாதுகாப்பு படைத் தலைவர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆலோசனை நடத்தியுள்ளார் . அதாவது பாக்கிஸ்தான் பிரதமர் இந்தியா மீது கூறிவரும் பொய் பிரச்சாரத்தையும் எல்லையில் தீவிரவாத ஊடுறுவல்களையும்  ஒரே நேரத்தில் தகர்க்க வேண்டும் என தோவால் எச்சரித்துள்ளார்.  இந்த கூட்டத்தில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைமை சமந்த் கோயல், வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, ராணுவத்தின் ஸ்ரீநகர் தலைமையிடமான 15 கார்ப்ஸ் (அரசு) லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு மற்றும் நக்ரோட்டா 16 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹர்ஷா குப்தா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங்.  ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.