அதிமுகவின் தற்போதைய அதிகார மையமான எம்.நடராஜன்தான் தற்போதய ஹாட் - டாபிக்.
அதிமுகவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீபாவை பின்னணியில் இருந்து இயக்குவது பாஜக தான் அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

காணும் பொங்கல் அன்று தஞ்சையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மீண்டும் அதிரடியாக பேசினார் நடராஜன்.அதில் மத்தியில் ஆளும் பாஜகதான் அதிமுகவை உடைக்க பார்கிறது என குற்றம் சாட்டினார்.
இதற்கு பாஜகவின் தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவத்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்கள சந்தித்த எம்.நடராஜன் அதிமுகவை பாஜக உடைப்பதற்கு செய்யும் பின்னனி வேலைகள் குறித்து உரிய நேரத்தில் ஆதாரங்களை வெளியிடுவேன் என்ற பகீர் தகவலை தெரிவத்தார்,

மேலும் அதிமுகவுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீபாவை இயக்குவது பாஜகதான் என்றும் தீபா மற்றும் தீபக் தங்கள் வீட்டு குழந்தைகள் அவர்களை பாஜக தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது. இதை அவர்கள் இல்லை என்று மறுக்க முடியுமா என்று சவால் விடுத்தார்.

தொடர்ந்து பாஜகவின் மீது நடராஜன் குற்றம் சுமத்தி வருவதால் அதிமுக பாஜக இணக்கமான கட்சிகள் என்ற மாயை தற்போது உடைந்து வருகிறது.

நடராஜனின் இந்த பகீர் குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பிலிருந்து பதிலடி கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
அது மட்டுமின்றி முதன்முறையாக பாஜக அதிமுக இடையே நடராஜன் மூலமாக மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.
