natarajan medical report
புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடல்நிலையில் தொடர்ந்து படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குளோபல் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் மற்றும் சிறுநீர பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் அனுமதிக்கபட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நடராஜனின் உடல் நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு நடராஜன் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் அவரது உடல் நிலையில் அடுத்து சில நாட்கள் கிரிட்டிக்கலாகவே இருக்கும் என்றும் குளோபல் மருத்துமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
