542 மக்களவை தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த, தேர்தல் முடிவுகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வருகிறது.

இந்திய அளவில், பிரதமர் மோடி 348 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சினர் குறைவான இடங்களிலே முன்னிலையில் உள்ளனர். இதனால் மோடியின் வெற்றி உறுதியாகி விட்டதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை ட்விட்டர் மூலம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜக கட்சியினரும், பெரும்பான்மையோடி ஆட்சியமைக்கும் பாஜக கட்சியின் வெற்றியை, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வெற்றி இந்தியாவின் வெற்றி என கூறி, ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி...

அவரின் ட்விட்டர் பதிவில், 

ஒன்றாக நாம் வளர வேண்டும்.

ஒன்றாக நாம் செழிப்பாக உள்ளோம்.

ஒன்றாக நாம் ஒரு வலுவான மற்றும் உள்ளடக்கிய இந்தியா உருவாக்க வேண்டும்.

இந்தியா மீண்டும் வெற்றி! என அதிரடியாக கூறியுள்ளார்.