புதுச்சேரியில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாமலேயே, ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கிறது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்படுகிறது. இங்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மற்ற மாநிலங்களில் உள்ள ஆட்சியில் விரிசல் ஏற்படுத்தி, உள்ளே நுழைந்ததுபோல் புதுச்சேரியிலும் நுழைவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. இது ஒருபோதும் நடக்காது. ஒரு எம்எல்ஏவும் இல்லாமலேயே, ஆட்சியை பிடிக்க பாஜக நினைப்பது பகல் கனவு காண்பது போன்றது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறேன். அப்போது, மக்களின் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்து கொடுப்பதே எனது முதல் பணி.