Asianet News TamilAsianet News Tamil

நாராயணசாமி ஆட்சி கவிழ்கிறது.. கூண்டோடு ராஜினாமா செய்ய அமைச்சரவை முடிவு.. பாஜக ஆட்டம் ஆரம்பம்.

இந்நிலையில் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை மற்றும் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு  செய்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

 

Narayanasamy Government is overthrown .. Cabinet decides to resign with cage .. BJP game begins.
Author
Chennai, First Published Feb 16, 2021, 12:10 PM IST

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அவர் வழங்கியுள்ளார். அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இதனால் அரசை கலைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். 

Narayanasamy Government is overthrown .. Cabinet decides to resign with cage .. BJP game begins.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பதவியில் இருந்து வருகிறது, புதுச்சேரி மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் ஓரிரு மாதங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் காமராஜ் தொகுதி எம்எல்ஏ ஜான் குமார் திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நாராயணசாமி ஆட்சி செய்வதற்கான பெரும்பாண்மையை இழந்துள்ளார். இதனால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சமபளத்தில் உள்ளன, 14 உறுப்பினர்களே உள்ளனர். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 

Narayanasamy Government is overthrown .. Cabinet decides to resign with cage .. BJP game begins.

இந்நிலையில் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை மற்றும் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு  செய்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக நாராயணசாமி தலைமையிலான ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்து, ஆட்சியைக் கலைக்க முயற்சித்துள்ளனர். எனவே நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம். விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என அவர் கூறியுள்ளார்.  

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios