Asianet News TamilAsianet News Tamil

கடைசி நேரத்தில் ஆட்சியை காப்பாற்ற போராடும் நாராயணசாமி.. அதிரடியாக எடுத்த பயங்கர முடிவு.

முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். அதாவது, நாராயணசாமி ஆட்சி தப்பிக்க மற்றொரு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Narayanasamy fighting to save the government at the last moment .. A terrible decision taken in action.
Author
Chennai, First Published Feb 22, 2021, 10:29 AM IST

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தது, இந்நிலையில் திடீரென காங்கிரஸ் எம்எல்ஏ தனது கலந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் இருவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால்  காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது 28 எம்எல்ஏக்களை கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு 15 எம்எல்ஏக்கள் தேவை. 

Narayanasamy fighting to save the government at the last moment .. A terrible decision taken in action.

எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 7 அதிமுகவுக்கு நாலு பாஜகவுக்கு 3 என 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்துவிட்டதாக ஆளுநரிடம் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 14 பேரும் கையெழுத்திட்டு மனு அளித்தனர். இதனையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி இன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு விதித்துள்ளார்.  இந்நிலையில் ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இதனால் நாராயணசாமி ஆட்சிக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.  இதற்கிடையே புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

Narayanasamy fighting to save the government at the last moment .. A terrible decision taken in action.

திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் திமுக கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தெரிவித்த நாராயணசாமி, பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாகவும், இறுதி முடிவு சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னெடுக்கப்படும் எனவும் கூறினார். அதாவது இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் சட்டசபை கூடிய உடன் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். அதாவது, நாராயணசாமி ஆட்சி தப்பிக்க மற்றொரு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது,  நியமன எம்எல்ஏ களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து ஓட்டுரிமை அளிக்க வாய்ப்பு மறுக்கும் பட்சத்தில், அரசு தப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios