Asianet News TamilAsianet News Tamil

போலீஸ் மரணத்துக்கு இழப்பீடு கொடுத்தீங்களே.. அரசு அலட்சியத்தால் இறந்த இளைஞருக்கு? பாயிண்டை பிடித்த பாஜக..!

 தலைமை செயலகத்தில் மரம் விழுந்து மரணமடைந்த பெண் காவலருக்கு 25 லட்சம் இழப்பீடு வரவேற்கதக்கது. ஆனால் அண்ணாசாலையில் அரசின் தவறினால் ஏற்பட்ட குழியில் தவறி விழுந்து அரசு பேருந்து ஏறி இறந்த 32 வயது வாலிபருக்கு இழப்பீடு இல்லை ஏன்? 

Narayanan Thirupathy questions Chief Minister Stalin
Author
Chennai, First Published Nov 3, 2021, 4:45 PM IST

அரசின் அலுவலர் விபத்தில் உயிரிழந்ததற்கு இழப்பீடு கொடுக்கும் அரசு, அரசின் அலட்சியத்தால் ஏற்படும் உயிரழிப்புக்கு இழப்பீடு வழங்குவதே நியாயம் என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!

Narayanan Thirupathy questions Chief Minister Stalin

இந்நிலையில், நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக தலைமைச் செயலக முதல்வர் தனிப்பிரிவுக் கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அங்கு பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து தலைமைக் காவலர் கவிதா மீது மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, உடனே உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் கவிதாவின் குடும்பத்தாருக்கு முன்னதாக 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்த நிலையில், மேலும் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி (மொத்தம் ரூ.25 லட்சம்) அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க;-  காண்டாகும் எடப்பாடியார்... ஓபிஎஸ் காலில் விழுந்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி..!

Narayanan Thirupathy questions Chief Minister Stalin

இந்நிலையில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் கவிதாவின் உடலுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால், நேற்று முன்தினம் சென்னை ராமாவரத்தில் இருந்து வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுக்கொண்டிருந்த ஐ.டி. ஊழியர் மழை நீர் தேங்கி நின்ற பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முழு பொறுப்பு அரசின் அலட்சியமே என குற்றம்சாட்டு எழுந்தது. 

இதையும் படிங்க;- ஐ.டி. ஊழியருக்கு எமனாக மாறிய பள்ளம்.. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!

Narayanan Thirupathy questions Chief Minister Stalin

இந்நிலையில், அரசின் அலட்சியத்தால் குழியில் தவறி விழுந்து அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபருக்கு இழப்பீடு ஏன் வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தலைமை செயலகத்தில் மரம் விழுந்து மரணமடைந்த பெண் காவலருக்கு 25 லட்சம் இழப்பீடு வரவேற்கதக்கது. ஆனால் அண்ணாசாலையில் அரசின் தவறினால் ஏற்பட்ட குழியில் தவறி விழுந்து அரசு பேருந்து ஏறி இறந்த 32 வயது வாலிபருக்கு இழப்பீடு இல்லை ஏன்? முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களே, உடன் இழப்பீடு  வேண்டுகிறேன். அரசின் அலுவலர் விபத்தில் உயிரிழந்ததற்கு இழப்பீடு கொடுக்கும் அரசு, அரசின் அலட்சியத்தால் ஏற்படும் உயிரழிப்புக்கு இழப்பீடு வழங்குவதே நியாயம் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios