காண்டாகும் எடப்பாடியார்... ஓபிஎஸ் காலில் விழுந்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி..!
அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷீர் கடந்த 28ம் தேதி எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததன் காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜெ.எம்.பஷீர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது காலில் விழுந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவை அதிமுகவுக்குள் சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு காட்டுத் தீ போல அதிமுகவில் பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷீர் கடந்த 28ம் தேதி எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.
இதையும் படிங்க;- #BREAKING சசிகலாவுக்கு ஆதரவு.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!
அப்போது, சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்த போது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை வற்புறுத்தினார்கள். அவரை வற்புறுத்தியது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமி எனும் தனிமனிதன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக முகம்மது ஜான் வாக்களித்தார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு ஆறுதல் கூட எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. இன்றைக்கு வந்த திமுக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். மேலும், அவரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் கூறினார்.
இதையும் படிங்க;- அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் திமுக.. அராஜகப் போக்கை நிறுத்துங்க.. கொதிக்கும் இபிஎஸ்.!
இதனையடுத்து, அன்று பிற்பகலிலேயே கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜெ.எம்.பஷீரை சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இதையும் படிங்க;- இந்த முறை ADMK ஜெயித்து இருந்தால் நான் தான் எம்ஜிஆர் என்று சொல்லியிருப்பார்.. எடப்பாடிக்கு எதிராக அன்வர் ராஜா?
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஜெ.எம்.பஷீர் சந்தித்துப் பேசியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க;- ஐ.டி. ஊழியருக்கு எமனாக மாறிய பள்ளம்.. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாகனத்திற்குச் செல்லும்போது, சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்து அவரை சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.