nanjil sampath pressmeet admk joining
பன்னீர்செல்வத்தின் எந்த நிபந்தனையும் எங்களை கட்டுப்படுத்த முடியாது எனவும், எந்த அறைகூவலையும் எதிர்கொள்ளும் நிலையில் தான் டிடிவி தினகரன் உள்ளார் எனவும் அவரது ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இரும்பு கோட்டையாக இருந்த அதிமுக அவரது மறைவிற்கு பிறகு இரு அணிகளாக பிரிந்தது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லவே அவரது அணியில் இருந்த எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.
இதையடுத்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி க்கும் எடப்பாடிக்கும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் எடப்பாடி ஒபிஎஸ் பக்கம் சாய ஆரம்பித்தார். இதைதொடர்ந்து பல நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இணைப்பு பேச்சுவார்த்தை நேற்று ஒரு முடிவுக்கு வரும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கபட்டது.
ஆனால் கடைசி நேரம் இணையாததால் எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், பன்னீர்செல்வத்தின் எந்த நிபந்தனையும் எங்களை கட்டுப்படுத்த முடியாது எனவும், எந்த அறிக்கூவலையும் எதிர்கொள்ளும் நிலையில் தான் டிடிவி தினகரன் உள்ளார் எனவும் தெரிவித்தார்.
மேலும், அணிகள் இணைப்பு என நேற்று நடந்தது ஒரு கேலிகூத்து எனவும், அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்பதில் சமரசத்திற்கு இடம் கிடையாது எனவும் தெரிவித்தார்.
தினகரன் பொதுக்கூட்டதால் அனைவரும் மிரண்டு போயுள்ளதாகவும், அரசு பொறுப்பில் இருந்து கொண்டு கட்சி குறித்து பேசுவது எடப்பாடிக்கு அழகல்ல எனவும் கூறினார்.
