முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  திமுகவில் இணைவதற்காக நேற்று அண்ணா அறிவாலயம் வந்தபோது அவருடன் தினகரன் கட்சியில் இருந்து விலகி எந்தக் கட்சியிலும் சேராமல் இருக்கும் நாஞ்சில் சம்பத்தும் அங்கு வந்தார்.

மேலும் அவர் திமுகவில் இணைய் வருகிறார் என்று திடீரென தகவல் பரவியதாலஅங்ழு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு தொண்டர்கள் கைகுலுக்கி வரவேற்றனர்.

அவரும் அண்ணா அறிவாலயத்துக்குள் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியேறினார். அப்போது செய்தியாளர்கள், நீங்கள் திமுகவில் இணைய வந்திருக்கிறீர்களா ? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே அண்ணா அறிவாலத்துக்குள் உள்ள கலைஞர் டி.வியில் நிகழ்ச்சி உன்றில் பங்கேற்க வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து அவர் கிளம்பிச் சென்றார்.