Asianet News TamilAsianet News Tamil

நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டி..? காங்கிரஸ் அதிர்ச்சி..!

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வசந்தகுமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளதால், இந்த தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Nanguneri by-election... DMK Competition
Author
Tamil Nadu, First Published May 26, 2019, 5:22 PM IST

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வசந்தகுமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளதால், இந்த தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2,56,637 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் வசந்தகுமார். வசந்த குமார், தற்போது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Nanguneri by-election... DMK Competition

ஒருவருக்கு இரண்டு பதவிகள் இருக்கக்கூடாது என்ற கொள்கை அடிப்படையில், எம்.பி.யாக வெற்றிபெற்றுள்ள இவர் 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி நாளை நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. Nanguneri by-election... DMK Competition

இத்தொகுதி நாங்குநேரி பாளையங்கோட்டை களக்காடு ஒன்றியங்களை கொண்ட தொகுதியாகும். இத்தொகுதியில் 1977 முதல் ஜனதா கட்சி அ.தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன. 1989-ல் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட போது மட்டும் ஒரே ஒரு முறை தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியை தி.மு.க. பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுத்துள்ளது. Nanguneri by-election... DMK Competition

இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக உள்ளதால் மீண்டும் காங்கிரசுக்கே சீட் ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள தி.மு.க. போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios