Asianet News TamilAsianet News Tamil

இதனால சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் கூட வந்துடும்... ராஜேந்திரபாலாஜியால் விழிபிதுங்கி இருக்கும் நாங்குநேரி அதிமுகவினர்!

முடிந்தவரை ராஜேந்திரபாலாஜியை தேர்தல் பணிக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது. அப்படி அனுப்பினால் பக்குவமாக பேசும்படி எச்சரிக்கை செய்து அனுப்புங்கள் என்று முதல்வருக்கு நாங்குநேரி அதிமுகவினர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். 

nanguneri ADMK Request against KD Rajendhira balaji
Author
Chennai, First Published Sep 26, 2019, 3:23 PM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. நான்குனேரிக்கு அதிமுகவில் திருநெல்வேலி முதல் திண்டுக்கல் வரையிலான தென் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தேர்தல் பணி போடப்பட்டுள்ளது. இந்த வகையில் ராஜேந்திர பாலாஜிக்கும் நாங்குநேரியில்தான் தேர்தல் பணி. இதனால், பயங்கர ஷாக் ஆன நாங்குநேரி அதிமுகவினர், அவரை இங்கு அனுப்பினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் கூட ஏற்படும்.  ராஜேந்திரபாலாஜியை தேர்தல் பணிக்கு அனுப்ப வேண்டாம். அப்படி அனுப்பினால் பக்குவமாக பேசும்படி எச்சரிக்கை செய்து அனுப்புங்கள் என எட்டப்படிக்கு கோரிக்கை வைத்துள்ளார்களலாம்.

nanguneri ADMK Request against KD Rajendhira balaji

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சில வாரங்களாகவே சர்ச்சைப் பேச்சுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  தொடங்கி விருதுநகர் எம்பி. மாணிக் தாகூர் வரை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டிகளிலும், பொதுக்கூட்டத்திலும் பேசிய வார்த்தைகளால் காங்கிரசார் காண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென் மாவட்ட அதிமுக சீனியர்கள் சிலர் எடப்பாடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில்; தென் மாவட்டம் என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் நாங்குநேரிக்கு தேர்தல் பணியாற்ற அனுப்பப்படுவது இயல்புதான். ஆனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சுகள் மற்ற அமைச்சர்களைக் காட்டிலும் எல்லைத் தாண்டிப் போய் விட்டது. 

nanguneri ADMK Request against KD Rajendhira balaji

இந்நிலையில், அவரை நாங்குநேரிக்கு பிரசாரத்துக்கு அனுப்பினால் மானாவாரியா பேசி மக்களிடம் நமக்கு கெட்ட பெயர் கிடைக்கும். அவர் விருதுநகரில் பேசியபோது போல் நாங்குநேரியில் பேசினால் காங்கிரஸ் சும்மா இருக்க மாட்டார்கள், காங்கிரஸ்காரர்கள் கூடும் இடத்தில் சுமுகமாக இருக்காது. ராஜேந்திரபாலாஜியால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முடிந்தவரை ராஜேந்திரபாலாஜியை தேர்தல் பணிக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது. அப்படி அனுப்பினால் பக்குவமாக பேசும்படி எச்சரிக்கை செய்து அனுப்புங்கள் என்று முதல்வருக்கு அவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios