சீமான் பற்றி அவதூராக வீடியோ மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வரும்  நடிகை விஜயலட்சுமிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர்களில் ஒருவரான காளியம்மாள் பதிலடி கொடுத்துள்ளார் . அதில் ,  நீ எல்லாம் ஒரு பெண் என்று வெளியில் சொல்லிக் கொள்ளாதே என விஜயலட்சுமியை அவர் கடுமையாக சாடியுள்ளார் சமீபத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  குறித்து நடிகை விஜயலட்சுமி சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார்,  அதில் விஜயலட்சுமியுடன்  சீமான் கேக் வெட்டுவது ,   மற்றும் சட்டை இல்லைமல் விஜயலட்சுமியுடன் நெருக்கமாக இருப்பது  போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ,  இது பழைய வீடியோ என்றாலும் விஜயலட்சுமி அதை வெளியிட்டது அனைவர் மனதிலும் கப்பென பற்றிக்கொண்டது. 

இந்நிலையில் சமூக வலைதளத்தில் சீமானை பலரும் கடுமையாகத் தாக்கி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ,  விஜயலட்சுமியின் இந்த நடவடிக்கையை நாம் தமிழர் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது .  ஆனாலும் சீமான் இதுவரையில் இதற்கு எதிர்வினையாற்றவில்லை .  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய  அக்காட்சியின் பேச்சாளர்களில் ஒருவரான காளியம்மாள் ,   '' விஜயலட்சுமி நீயெல்லாம் ஒரு பெண் என்று சொல்லிட்டு திரியாதே,  எங்கள் அண்ணன் சீமான் பெண்களை ஆண்களுக்கு சமமாக பாவிப்பவர்,   பெண்களுக்கு தேர்தலில் சமவாய்ப்பு தந்திருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்.  அப்படிப்பட்ட தலைவரை பெண்களுடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல,  ஒரு தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு தெரியுமா.?  அன்பு தெரியுமா.?  உணர்வு தெரியுமா.?  அந்த உறவுதான் எங்கள் அண்ணனுக்கும் எங்களுக்கும் இடையேயான உணர்வு. 

இனி உன் நாக்கு என் அண்ணனையும் மற்ற பெண்களையும் ஒன்றுபடுத்தி  பேசினால் நடக்குறதே வேற... அண்ணன் தங்கையா பேசு ,  தகப்பன் மகளா பேசு , வேறு  எந்த உறவையாவது சொல்லி  பேசினா அவ்வளவுதான் ஒட்டுமொத்த பெண்களும் கொந்தளிப்போம்,   நீ எல்லாம் ஒரு பொண்ணுன்ணு சொல்லிட்டு திரியாத ,  யாராவது காசு கொடுத்தா வீட்டு கஷ்டத்திற்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன்.  ஆனால் கருத்தியலை களவாடி காசு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்க தான் பார்க்கிறேன் என காளியம்மாள் விஜயலட்சுமியை விளாசித் தள்ளினார்.  அவர் பேசிய வீடியோவை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.