தர்மபுரியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், செந்திலின் தந்தை  பிரபலதான வழக்கறிஞர் என்ற முறையில் அந்த குடும்பத்தினர்  நாமக்கல்லில் செட்டில் ஆனார்கள். கோழிப்ண்ணை உள்ளிட்ட சில தொழில்களை நடத்தி வந்த  செந்தில், கொங்கு மண்டல தளபதி என அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வந்த ராவணன் மூலம் போய்ஸ் கார்டனில் அறிமுகமாகிறார்.

அதுவரை ஜெயலலிதா மிகவும் நம்பிக் கொண்டிருந்த வாயில்லாப் பூச்சி என பெயர் வாங்கிய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனின்  ஜுனியர் என்ற பெயரில் செந்தில் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்தார். அப்போதிருந்து தான் ஜெயலலிதா மன்னாகுடி கும்பலிடம் ஏமாறத் தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து தான் வழக்கறிஞர் செந்தில் சசிகலா வகையறாவுக்காக தியேட்டர்களை மிரட்டி எழுதி வாங்குவது,  படங்களை மிரட்டி வாங்குவது என சட்டத்துக்குப் புறம்பாக  பல வேலைகளை மன்னார்குடி குடும்பத்துக்காக அவர் செய்த பல வேலைகள் தற்போது அவரது கழுத்தை நெருக்கி கொண்டிருக்கிறது.

இதே போல் ஜெயலலிதாவை வேண்டும் என்றே வழக்கில் சிக்க வைப்பதற்காக ஒரு டீம் வேலை செய்தது என்றும் அதில் செந்திலும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. இப்படி சட்டத்துக்கு புறம்பாக, இல்லீகலாக சேர்த்த சொத்து மட்டும் 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படி இல்லீகலாக இவர் செய்த செயல்கள் தற்போது ரெய்டாக அவர் தலையில் வந்து விடிந்துள்ளது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என அடிக்கடி செந்திலின் வீடு, அலுவலகம் என நடக்கும் ரெய்டுகள் வேரை நிலைகுலையச் செய்துள்ளன. 

தற்போது சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு பிரமண்ட அலுவலகம் அமைத்து வக்கீல் தொழில் செய்து வந்தாலும் அதிமுகவினரும், ஜெயலலிதா விசுவாசிகளும் அவர் மீது இன்றும் காண்டில் இருக்கிறார்கள்.

இப்படி  வழக்கறிஞர் செந்தில் படு பந்தாவாக இருந்தாலும் இப்போது என்னவோ நாள்தோறும் விசாரணை, விசாரணை என்ற பெயரில் அல்லாடிக் கொண்டிருக்கிறார். இந்த சிக்கல்களில் இருந்து செந்தில் மீண்டு வருவாரா ? மன்னார்குடி குடும்பத்தால் மென்மேலும் சிக்கலில் விழுவாரா என்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.