Asianet News TamilAsianet News Tamil

நமாமி கங்கா... நாசமாகிப்போன கங்கா... மோடியை விமர்சித்த கமல் ஹாசன்..!

இந்துக்களின் புனித நதியாக கங்கை பார்க்கப்படுகிறது. இந்த நதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் உடல்கள் வீசப்பட்டுக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

Naami Ganga ... Destroyed Ganga ... Kamal Hassan who criticized Modi ..!
Author
Tamil Nadu, First Published May 12, 2021, 5:20 PM IST

இந்துக்களின் புனித நதியாக கங்கை பார்க்கப்படுகிறது. இந்த நதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் உடல்கள் வீசப்பட்டுக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது ஒட்டுமொத்த இந்தியாவேயே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பீகாரிலுள்ள பக்ஸர் மாவட்டம், சௌசா கிராமத்தின் மகாதேவ் கட் வழியாகச் செல்லும் கங்கை நதியில் இந்த உடல்கள் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.Naami Ganga ... Destroyed Ganga ... Kamal Hassan who criticized Modi ..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் இறப்பவர்களின் உடல்களை இவ்வாறு கங்கையில் தள்ளிவிடுவதாகக் கூறப்படுகிறது. பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் முறையாக சுகாதார கட்டமைப்பு இல்லாததால் மக்கள் சிகிச்சை பெற அல்லல்படுவதாகவும், வேறு வழியில்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருப்பவர்கள் இறந்துவிட்டால் அவர்களை உறவினர்கள் நதிகளில் மிதக்க விடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.Naami Ganga ... Destroyed Ganga ... Kamal Hassan who criticized Modi ..!

இதற்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு தான் இதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன” என்று விமர்சித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios