நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என்று அழைப்பவர்களை சாகடிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வடபழனியில் நடைபெற்ற மிக மிக அவசரம் என்ற படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான் ரஜினியை தலைவர் என அழைப்பவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். ரஜினிகாந்த் தலைவர் என்றால், அப்போ பிரபாகரன், காமராஜர், கக்கன் உள்ளிட்டோர் யார் என்றும் அவர்கள் என்ன சமூக விரோதிகளா, இல்லை ஆன்டி இந்தியனா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
 

தலைவர் யார் என்று தெரியாத கூட்டம் தான், திரையரங்குகளில் தலைவர்களை தேடுகின்றனர். சினிமாவில் நடிப்பவன் நடிகன் தானே தவிர, தலைவரல்ல என்று கூறினார். மேலும் தொலைக்காட்சிகளில் கூட ரஜினிகாந்த் என்று கூறுவதில்லை. தலைவர் என்றுதான் அழைக்கிறார்கள். இவரது இந்த பேச்சு ரஜினி ரசிகர்கள் இடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. 

தேவர் மகன், பாரதிராஜாவின் வேதம் புதிது, பாக்கியராஜின் இது நம்ம ஆளு, கமல்ஹாசனின் விருமாண்டி போன்ற படங்களில் இல்லாத நேர்மை, பரியேறும் பெருமாள் படத்தில் இருந்ததால் எதிர்ப்பு எழவில்லை என்றார் சீமான் கூறியுள்ளார்.