mythreyan press meet

அதிமுக அம்மா அணி…இது தான் ஓபிஎஸ் அணியின் புதிய பெயரா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக அதிமுகவின் சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ளது. இரு தரப்பினருமே தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரு தரப்பினருமே இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக வின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடையே பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்.பி. மைத்ரேயன், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நாங்கள் கூறியதைப் போல், தற்போது சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறினார்.

அதிமுக பெயரை இரு அணிகளும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் , ஓபிஎஸ் அணிக்கு அதிமுக அம்மா அணி என பெயர் வைக்கலாம் என கலந்து பேசி வருவதாக மைத்ரேயன் தெரிவித்தார்.