ஆளுநருக்கு வாய்க்கொழுப்பு அதிகம்! இப்படியே பேசிட்டு இருந்தீங்க தமிழ்நாட்டுல எங்கும் நடமாட முடியாது! முத்தரசன்
அதிமுக தீர்ப்பை பொறுத்தவரை யாருக்கு சாமர்த்தியமோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இது அவர்களுடைய பிரச்சனை. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, நாளைக்கு ஓபிஎஸ் வெற்றி பெறுவார்.
அதிமுகவின் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பவர் எடப்பாடி பழனிசாமி அல்ல. மத்தியில் ஆளக்கூடியவர்களே என முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழி தமிழக ஆளுநருக்கு பொருத்தமாக இருக்கும்.
இதையும் படிங்க;- இதுக்கு எதுக்கு தேர்தல்? டைரக்ட்டா ஆளுங்கட்சி ஜெயிச்சுட்டாங்கன்னு சொல்லிட்டு போங்க.. கொதிக்கும் விஜயகாந்த்.!
காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக வாய் கொழுப்போடு பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும். காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28-ம் தேதி போராட்டம் நடைபெறும்.
இதையும் படிங்க;- இது ஒன்னு போதும்.. நாங்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய.. அசராத வைத்தியலிங்கம்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவின் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பவர் எடப்பாடி பழனிசாமி அல்ல. மத்தியில் ஆளக்கூடியவர்களே. அதேபோல் சரணாகதி அடைவதில் ரொம்ப கைதேர்ந்த மனிதர் இபிஎஸ் என முத்தரசன் விமர்சனம் செய்தார்.
அதிமுக தீர்ப்பை பொறுத்தவரை யாருக்கு சாமர்த்தியமோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இது அவர்களுடைய பிரச்சனை. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, நாளைக்கு ஓபிஎஸ் வெற்றி பெறுவார் என முத்தரசன் கூறினார். தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை. அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- இது காவிக் கட்சியின் சித்து விளையாட்டு.. பாஜகவை கிழித்து தொங்க விட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்..!