இது ஒன்னு போதும்.. நாங்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய.. அசராத வைத்தியலிங்கம்..!
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அதேநேரத்தில் ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் செய்ததியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். அதிமுக பொதுக்குழுவை கூட்டியது தான் செல்லும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சொல்லவில்லை என வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
அதேபோல், தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறுகையில்;- தீர்மானத்தை ஏற்று கொள்ளதா காரணத்தால் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்த கூடாது. எந்த அடிப்படையில் பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்லியுள்ளது என்பதை தீர்ப்பின் நகலை முழுமையாக பார்த்த பின்னர் தான் தெரிய வரும். சிவில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனப்படிடையில் எங்களது சட்ட போராட்டம் தொடரும் என திருமாறன் கூறியுள்ளார்.