தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும் என எங்களைப் போன்றவர்கள் அமைதி காத்து வருகிறோம் என மு.க.ஸ்டாலினை எச்சரிக்க விரும்புகிறேன் என பாஜக் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர், ‘’தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தபோது சீமான் போனாரா? ஜெயராமன் போனாரா? பூவுலகின் நண்பர்கள் போனார்களா? நான் கேட்கிறேன் வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரவில்லை. அவர் வர மாட்டார். பிண அரசியல் நடத்தும் திமுகவை முஸ்லீம் சமுதாய மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

போராட்டமே சட்ட விரோதம். எதற்காக போராட்டம்? போராடுபவர்களிடம் கேட்கிறேன். உங்களுக்கு என்ன பாதிப்பு? இந்தச் சட்டத்தால் நாட்டில் உள்ள 120 கோடி மக்களில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா? அறிவிப்பூர்வமாக நினைத்து உணர்ச்சிகளை தூண்டும் விதமாக நடந்து கொண்டால் எதிரணியினராலும் உணர்ச்சிகளைத் தூண்டிவிட முடியும்.

 

 

அதேபோல திமுகவோ அதனுடைய இலவச இணைப்புகளான விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் தூண்டிவிட்டு தமிழகத்தை கலவர பூமியாக்க வேண்டும் என நினைத்தால் எதிர்வினையாற்றுவது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதால் எங்களைப் போன்றவர்கள் அமைதி காத்து வருகிறோம் என மு.க.ஸ்டாலினை எச்சரிக்க விரும்புகிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.