muslims are safe under bjp rule says tamilisai
உத்தரபிரதேச மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டமாக நடந்து முடிந்தது. மொத்தம் 403 தொகுதிகளில், 384 இடங்களில் பாஜக போட்டியிட்டு, 325 தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக, மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒருவர்கூட, இஸ்லாமியர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதைதொடர்ந்து இஸ்லாமிய மக்களை, பாஜக புறக்கணிப்பதாக சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதே குற்றச்சாட்டை, இடதுசாரிகளும் விமர்சித்தும், பதிவு செய்தும் வருகின்றனர்
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகின்றனர். அதனால்தான் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள், பாஜகவை முழுமையாக நம்புகிறார்கள். அதன் எதிரொலிவே உத்தரபிரதேசத்தில், மாபெரும் வெற்றியை பாஜக அடைந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும், தமிழகத்தில் தொல். திருமாவளவனும் இஸ்லாமியர்களை முன் வைத்து அரசியல் செய்ய முயற்சித்தார்கள். இனி அவர்களால் அரசியல் செய்ய முடியாது என்பதைத்தான் இந்த வெற்றி அவர்களுக்கு உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
