Asianet News TamilAsianet News Tamil

ரஜினிகாந்த் வீட்டிற்கு படையெடுக்கும் முஸ்லீம் அமைப்புகள்.!! குஷியில் ரஜினி ரசிகர்கள்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம்  குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் கூறியிருந்த நிலையில், இவர்களின்  சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. அப்போது சிஏஏ வினால் முஸ்லீம்களுக்கு இருக்கும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.

Muslim organizations invading Rajinikanth's home Rajini fans in Khushi.
Author
Tamilnádu, First Published Mar 2, 2020, 7:48 AM IST

T.BalaMurukan
நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது முஸ்லீம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Muslim organizations invading Rajinikanth's home Rajini fans in Khushi.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம்  குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் கூறியிருந்த நிலையில், இவர்களின்  சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. அப்போது சிஏஏ வினால் முஸ்லீம்களுக்கு இருக்கும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.

Muslim organizations invading Rajinikanth's home Rajini fans in Khushi.

இந்தநிலையில், ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

     "இன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும், அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios