Murder threat to Amruta
தான் ஜெயலலிதா மகள் என்று கூறிய அம்ருதாவுக்கு, கொலை மிரட்டல்கள் காரணமாக, பெங்களுரூ திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்ருதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, தான் ஜெயலலிதாவின் மகள் தான் என்றும், இது குறித்து டி.என்.ஏ. பரிசோதனை செய்தார் உண்மை வெளியாகும்
என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அம்ருதாவை, சென்னை அல்லது கர்நாடக
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யம்படி அறிவுறுத்தியது. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் உறவினர், ஜெயலலிதாவுக்கு மகள்
இருப்பதாகவும் அது அம்ருதா என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து ஓரிரு தினங்கள் கழித்து, ஜெயலலிதாவின் மகள்
அம்ருதா என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதாவின் தோழியான கீதா, ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது மரணத்துக்கு நீதி விசாரணை தேவை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்றும் கூறி வந்தார். மேலும், ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான் என்றும் அந்த மகள் அம்ருதா என்றும் அவர் கூறியிருந்தார். நடிகர் சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறந்த பெண் தான் அம்ருதா. இது ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் தெரியும் என்றார். அம்ருதா, 1996 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இருந்தது தனக்கும் தெரியும் என்று கூறினார்.
தான் ஜெயலலிதா மகள் என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்த அம்ருதாவுக்கு தற்போது கொலை மிரட்டல்கள் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அம்ருதா தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த அம்ருதா, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு பெங்களூரு சென்று விட்டதாக தெரிகிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்ருதா விரைவில் மனு தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகி உளளது. இந்த நிலையில் அம்ருதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து உறவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
