Asianet News TamilAsianet News Tamil

திமுக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியில் வசித்து வரும் சேவியர் குமார்(42). இவர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்து வந்தார்.

Murder Case.. dmk union secretary Ramesh removed tvk
Author
First Published Jan 24, 2024, 12:56 PM IST

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சேவியர் குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியில் வசித்து வரும் சேவியர் குமார்(42). இவர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்து வந்தார். மேலும் மைலோடு கிறிஸ்துவ ஆலையத்தின் பங்குப்பேரவையில் முன்னாள் பொருளாளராகவும் சேவியர் குமார் பொறுப்பு வகித்து வருகிறார். சேவியர் குமாருக்கு ஜெமிலா என்ற மனைவியும், 2 மகளும் உள்ளனர். ஜெமிலா மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இதையும் படிங்க;- ADMK : அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளரை நியமித்த எடப்பாடி.! யார் இந்த மகேந்திரன்.?

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  இந்த விவகாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார்கள் ராபின் சன், பெனிட்டோ உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  தொடர்ந்து இந்து மத விரோதப் போக்கில் திமுக.. தவறைத் தட்டிக் கேட்ட பாஜகவினரை கைது செய்வீங்களா? அண்ணாமலை.!

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios