Asianet News TamilAsianet News Tamil

முரசொலி பஞ்சமி நிலம்..? உதயநிதி ஸ்டாலின் ஆஜராக நோட்டீஸ்..!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வந்த குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Murassoli Panchami land ..? Udayanidhi notices Stalin's appearance
Author
Tamil Nadu, First Published Nov 16, 2019, 3:41 PM IST

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வந்த குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினிடம் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19ஆம் தேதி விசாரணை நடத்துகிறார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான, முரசொலி அலுவலகம் இருக்குமிடம், ஒரு பஞ்சமி நிலம் என சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதே மறுத்து கண்டனம் தெரிவித்தார்.

Murassoli Panchami land ..? Udayanidhi notices Stalin's appearance

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன், இது குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தார். தொடர்ந்து, இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க தேசிய ஆணையமும் உத்தரவிட்டது.Murassoli Panchami land ..? Udayanidhi notices Stalin's appearance

இந்நிலையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வந்த குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios