முரசொலி ஆவணத்தை திமுக ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்தை சீல் வைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமமுக மாநில அமைப்பு செயலாளர் சி.ஏழுமலை அக்கட்சியிலிருந்து பிரிந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உலகத்தில் எங்கேயாவது திருவள்ளுவர் சிலை நின்ற கோலத்தில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். கன்னியகுமரியில் நின்ற கோலத்தில் திருவள்ளுவர் சிலையை திமுக வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்றார். 

இதையும் படிங்க;- ஓடும் காரில் வைத்து இளம்பெண்ணிடம் காம களியாட்டம்... பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய கொடூரம்..!

திருவள்ளுவர் பற்றி அரசியலாக்குவது வேதனைகுரிய வி‌ஷயமாகும். திருவள்ளுவரை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை. காவி நிறம் என்பது பாஜகவின் நிறம் அல்ல அது ஓரு பொதுவான நிறம். திருவள்ளுவரின் அடையாளத்தை திமுகவினர் அழிக்க நினைக்கின்றனர்.

இதையும் படிங்க;- 2 நாட்களில் மு.க.ஸ்டாலின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும்... உ.பி.க்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மாஃபா பாண்டியராஜன்..!

மேலும், பேசிய அவர் உரிய நேரத்திற்கு முன்பு முரசொலி ஆவணத்தை திமுக ஓப்படைக்க வேண்டும். இல்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்தை சீல் வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.