தாவல் திலகம் குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை..! கடுமையாக விமர்சித்த முரசொலி
தி.மு.கழகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக, அவர் வருத்தம் தெரிவித்தும், வழக்கு அவர் மீது போடப்பட்ட பின்னும், அவர் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிற குஷ்பு, எச்.ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? அவர் பேசியதற்காக, அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய குஷ்பு, தன்னைப்பற்றி ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் கருத்திற்கு திமுக தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில், திமுக நாளிதழான முரசொலியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது, அதில் மைக் கிடைத்துவிட்டது என்பதால் எதையும் பேசிவிடலாம் என்று தரம் தாழ்ந்து பேசினால் கொடுத்த வழியிலேயே அதற்குப் பதிலும் வரும் என்பதை அரசியலில் புதிய வேடம் கட்டி யுள்ள குஷ்பு உணர வேண்டும்! தி.மு.கழகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த அம்மையார் குறித்து பேசுகையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள், அம்மையார் மனதைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அந்தப் பேச்சாளர் கண்டிக்கப்பட்டார்.
கூட்டணியில் கூட விடுதலை சிறுத்தை வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் உள்ளனர்..! திருமாவளவன் ஆதங்கம்
அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கப் பணிக்கப்பட்டு வருத்தமும் தெரிவித்தார். கழக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அந்த பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். அந்த பேச்சாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் மேடையில் இருந்த அமைச்சரும் மன்னிப்பு கோர வேண்டும் என்று அங்கு பேசியுள்ளார். பல நேரங்களில் வாய் நீளம் காட்டுவது பல சங்கடங்களை உருவாக்க டும் என்பதை அம்மையார் உணராது பேசுவது 'சும்மா இருந்த சங்கை 'ஊதிக்கெடுத்த' கதையாக மாறிவிட்டது. ஓவராக சில காட்சிகளில் 'ரீ ஆக்ட்" செய்தால் அது விரசமாகிவிடும் என் பது சிறந்த நடிகையான அம்மையாருக்குத் தெரியாமல் போனது ஏனோ?
அம்மையார் அரசியலில் 'மைலேஜ் எடுக்கும் நோக்கில் பேசியது இப்போது சேம் சைடு கோல் போல ஆகிவிட்டது! அவரைப் பற்றி அதாவது இன்றைய பி.ஜே.பி.யின் தேசிய செயற் குழு உறுப்பினர் பற்றி அன்றைய தேசியச் செயலாளராக இருந்த எச்.ராஜா பேசிய அருவருக்கத்தக்க பேச்சு மீண்டும் வலைதளங்களில் 'வைர வலம் வரத் தொடங்கி விட்டது. அப்பப்பா! அம்மையாரின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசி அவர் எப்படி எல்லாம் ஆனந்தப்பட்டிருக்கிறார் என்பது திருமதி குஷ்பு அவர்கள் பார்வைக்கும் சென்றிருக்கும் என எண்ணுகிறோம். ஒரு வேளை அவரது கவனத்துக்குச் சென்றிருக்காவிடில் அந்தப் பேச்சில் ஒருசில பகுதிகளைத் தருகிறோம். முடை நாற்றம் எடுக்கும் வகையில் 'நரகல் நடை யில் பேசும் அந்தப் பேர்வழி பி.ஜே.பி.யின் கடைநிலை பேச்சாளர் கூட அல்ல: மாநில அளவில் கூட அல்ல; தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வகித்து அந்தக்கட்சியினை வளர்த்துக்கொண்டிருப்பவர்: அவரோடு சேர்ந்துதான் தமிழ் நாட்டில் தாமரையை மலரச் செய்ய குஷ்பு புறப்பட்டிருக்கிறார்.
எச்.ராஜாவின் பேட்டி "ஒரு அம்மா. அந்த அம்மாவுக்கு பேஷன்னா அதான் கல்யாணம் பண்ணிக்காமல் எப்படி வேணுமானாலும் குடித்தனம் பண்ணலாம்னு பேசிமாட்டிட் பாங்களே... அவங்க பேரென்ன என பிராமண பாஷையில் வாயெல்லாம் பல்தெரிய அவர் கேட்க: அவர் முன்னிருந்த கூட்டத்தில் ஒரு சிலர் "குஷ்பு' எனக் கத்திட: ஆமாம், 'குஷ்பு சுந்தர்' என இவர் கிண்டலடித்து மகிழ்கிறார்... மேலும் குஷ்பு ஏற்ற வேடங்களைக் கேலி செய்யும் வகையில், (அவரது படங்களில் எவ்வளவு எவ்வளவு தூரம் வக்ரங்கள்... ஆபாசங் கள்... அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணங்களாக எவ்வளவு கேவல மான படங்கள்.. இப்படி எல்லாம் திரு மதி, குஷ்பு குடும்ப வாழ்க்கையையும், திரை வாழ்க்கையையும் வக்ரபுத்தியுடன் வருணித்த வீடியோக்கள் மீண்டும் பவனிவரத் தொடங்கி விட்டனவே.
தி.மு.கழகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக, அவர் வருத்தம் தெரிவித்தும், வழக்கு அவர் மீது போடப்பட்ட பின்னும், அவர் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிற குஷ்பு, எச்.ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? அவர் பேசியதற்காக, அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா; அல்லது இனி யாவது கேட்பாரா? “தி.மு.கழகத்தினர் பெண்களைக் கேவலமாக மதிக்கின்றனர். நடத்துகின்றனர்" என்று பேசி; மறந்துவிட்ட பா.ஜ.க. ராகவனின் கதைகளையெல்லாம் மீண்டும் கிளறிவிட எண்ணுவதில் அம்மையாருக்கு என்ன ஆனந்தமோ? குஷ்பு பேச்சைப் பொருட்படுத்தக் கூடாது என்று இருந்தோம்; கொஞ்சம் அளவுக்கு மீறி வாய் நீளம் காட்டத் தொடங்கி விட்டதால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்காக சிறிய விளக்கங்களைப் பதிவாகப் பதிவு செய்துள்ளோம். குஷ்பு புரிந்து கொண்டு நடப்பார் என எண்ணுகிறோம் என முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்து.
இதையும் படியுங்கள்
கூட்டணியில் கூட விடுதலை சிறுத்தை வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் உள்ளனர்..! திருமாவளவன் ஆதங்கம்