munusamy worried about thambidurai speech

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் அணியினர் கட்சியில் மீண்டும் இணைந்ததுபோல தினகரனும் இணைய வேண்டும் என்ற தம்பிதுரையின் பேச்சு கவலை அளிப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் அணி, மீண்டும் கட்சியில் இணைந்து முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தது. அதேபோல, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று தனித்து இயங்கும் தினகரனும் மீண்டும் கட்சியில் இணைந்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆட்சியைக் காப்பாற்ற தினகரன் ஒத்துழைக்க வேண்டும் என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தம்பிதுரையின் பேச்சு வேதனை அளிப்பதாக கே.பி.முனிசாமி தெரிவித்துள்ளார். தினகரன் மீதான பாசத்தினால் தம்பிதுரை அவருக்கு அழைப்பு விடுத்திருக்கலாம்; ஆனால் அதே நேரத்தில் கட்சியின் நலனையும் தம்பிதுரை கருத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.