2020 -21ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் இன்று காலை மும்பை பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது . மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது .  இந்திய குடியுரிமை சட்டம் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு ,  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ,  உள்ளிட்ட  பிரச்சனைகளையும் முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது அதேபோல் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கான பொருளாதார வீழ்ச்சி என நாடு மிகப் பெரும் நெருக்கடியில் உள்ள நிலையில் இந்திய பொது பட்ஜெட் இன்று தாக்கல் ஆகிறது . 

இந்நிலையில் இன்று காலை மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 779 புள்ளிகள் சரிந்து 40,  444 ஆக குறைந்தது .  தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 81 புள்ளிகள் சரிந்து 1,880 ஆகக்குறைந்தது இன்று காலை 11 மணிக்கு  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.  ஒட்டுமொத்த தேசமும் இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் என்ன அறிவிக்கப் போகிறார் வளர்ச்சித் திட்டங்கள் என்ன மக்கள்தான் நலத்திட்டங்கள்  என்ன வர உள்ளது என்பதை உற்று நோக்கி வருகின்றனர் பெரும் தொழிலதிபர்கள் முதல் சாமானியர்கள் வரை இந்த பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் .  இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கின.  இது மேலும் இந்திய பொருளாதாரத்தை கேள்விக்குறியாகியுள்ளது . 

இது குறித்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள்,  கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் பங்கு சந்தையில் அதிக ஏற்ற இறக்கம்  நிலவியது கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மத்திய பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள் போன்றவையும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன அதேபோல் சர்வதேச பங்குச் சந்தைகளில் ஹாங்காங் ,  ஜப்பான் ,  தென்கொரியா பங்குச் சந்தைகள்  இழப்பை சந்தித்தன  இந்நிலையில் இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசாக்கள் குறைந்து 21 . 51 ஆக இருந்தது இன்று காலை நிலவரப்படி பங்குச்சந்தை வர்த்தகம் சரியா தொடர்ந்துள்ளது. பட்ஜெட் நேரத்தில் பங்கு சந்தை சரிந்துள்ளதால் , முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர் .