தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபத்தில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்ட இஸ்லாமிய இளைஞர் முஜி ரஹ்மானுக்கு டிவிட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம்! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை!  பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான்! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்!

இளைய தலைமுறையினர் பெண்களை, கலையை, பிற மதங்களை மதித்து நடக்க வேண்டும். என்னவோ, மொத்தத்துல பெரிய கோவிலுக்குத்தான் டைம் சரியில்ல போல’’ என கடுமையாக சாடியுள்ளார்.

 

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, உணவு டெலிவரி செய்யும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையை கழிக்க, தஞ்சையில் உள்ள பெரிய கோவிலுக்கு, தனது நண்பர்களுடன் கடந்த ஜூன் 5ம் தேதி சென்ற அந்த இளைஞர், கோயிலில் இருந்த பெண் சிற்பங்களுடன் சல்லாபத்தில் ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்து, அதனை சமூக தளங்களில் வேறு பதிவிட்டிருக்கிறார். 

 

இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். சகோதரி வீட்டில் இருந்த முஜிபுர் ரகுமான் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முஜி ரஹ்மானின் இந்த செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.