நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து , அத்தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார், ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட தொண்டர்கள் முதல் முன்னணி தலைவர்கள் வரை கோரிக்கை வைத்தனர், 

ஆனால் அனைத்தையும் நிராகரித்த ராகுல் அந்த பொறுப்பிற்கு தகுதியான ஒருவரை நியமித்துக்கொள்ளுபடி கூறிவிட்டார், இந்த நிலையில்  மஹாராட்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும்  சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, 

எனவே ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு விரைந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தற்காலிக தலைவரை நியமித்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது எனவே, காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரும், தலித் சமுதாயத்தை சேர்ந்தவவர் என்ற அடிப்படையில் முகுல் வாஸ்னிக்கிற்கு தற்காலிக தலைவராகும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக காங்கிரஸ் மேல்மட்ட தகவல்கள் கூறுகின்றன, 

முகுல் வாஸ்னிக்கிற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜின கார்கேவின் பெயரும் அடிபடுகிறது, நாளை காலை டெல்லியில் நடைபெற உள்ளது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பின்னரே காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் யார் என்பது தெரியவரும்... ஆனாலும் முகுல் வாஸ்னிக்கிற்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது, முகுல் வாஸ்னிக் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருந்தவர் என்பதும் கூடுதல் தகவல்.